எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச் 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றையதினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இவ்விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
பாராளுமன்றத்தை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கூட்டுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 3 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை)
மு.ப 9.30 – 10.00 : நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 – 11.00 : வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப 11.00 – 11.30 : நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மு.ப 11.30 – பி.ப 5.00 : 2467/67 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதம்.
பி.ப 5.00 – 5.30 : எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம்.
2026 மார்ச் 4 ஆம் திகதி (புதன்கிழமை)
மு.ப 9.30 – 10.00 : நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரையான பாராளுமன்ற நடவடிக்கைகள்.
மு.ப 10.00 – 10.30 : பிரதமரிடம் கேட்கப்படும் வினாக்கள்.
மு.ப 10.30 – 11.00 : வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப 11.00 – 11.30 : நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மு.ப 11.30 – பி.ப 5.00 : நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பான விவாதம்.
பி.ப 5.00 – 5.30 : சபை ஒத்திவைப்பு வேளையின் போது கேட்கப்படும் வினாக்கள்.
2026 மார்ச் 5 ஆம் திகதி (வியாழக்கிழமை)
மு.ப 9.30 – 10.00 : நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரையான பாராளுமன்ற நடவடிக்கைகள்.
மு.ப 10.00 – 11.00 : வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப 11.00 – 11.30 : நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மு.ப 11.30 – பி.ப 5.00 : மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சபை ஒத்திவைப்பு விவாதம்.
2026 மார்ச் 6 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை)
மு.ப 9.30 – 10.00 : நிலையியற் கட்டளை 22 இன் 1 முதல் 6 வரையான பாராளுமன்ற நடவடிக்கைகள்.
மு.ப 10.00 – 11.00 : வாய்மூல விடைக்கான வினாக்கள். (மேற்கண்ட தகவல்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.)
மு.ப 11.00 – 11.30 : நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மு.ப 11.30 – பி.ப 5.00 : தனிநபர் பிரேரணைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.