-கஜிந்தன்-
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி.வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 25ம் திகதி பதவியேற்கவுள்ளார்.
வலிகாமம் கிழக்கு புத்தூரை சேர்ந்த பேராசிரியர் வேல்நம்பி யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.
துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர், தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றார்.
இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















