-ஞானத்தமிழ்-
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டு விழாவுக்கான போட்டிகளில் பெரு விளையாட்டுக்கள் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இப்பெரு விளையாட்டுக்களில் இன்றும், நாளையும் காலை 8.30 மணி முதல் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி நெடியகாடு விளையாட்டுக்கழக மைதானத்திலும், 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்திலும் எதிர்வரும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் ஆண்களுக்கான கரப்பந்து கெருடாவில் விளையாட்டுக் கழக மைதானத்திலும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பெண்களுக்கான கரப்பந்து வல்வை விளையாட்டுக்கழக மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 22 விளையாட்டுக் கழகங்களின் அணிகள் பங்குபற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


















