-800 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது-
-கஜிந்தன்-
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் டீசல் பதுக்கிவைத்திரந்த இருவர் நேற்று அதிகாலை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி சந்தேகநபர்கள் இருவரும், டிசல் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று அதிகாலை சந்தேகநபர்களின் இருப்பிடத்தை முற்றுகையிட்ட பொலிஸார், பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 800 லீற்றர் டீசலையும், பதுக்கலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், கைப்பற்றினர்.
கைதான சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
















