கிரீஸில் நடைபெற்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் ஈழத்தமிழரான தனுராஜ் ரவிராஜ் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.

15 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனுராஜ் ரவிராஜ் இத்தாலி நாட்டின் சார்பில் பங்கு கொண்டு வெற்றி பெற்றார்.
இதேவேளை பிரித்தானியாவில் வசித்து வரும் இத்தாலியக் குடியுரிமை கொண்ட தனுராஜ் ரவிராஜ், எதிர்வரும் ஜூலையில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணக் காய்கறி மற்றும் பழங்கள் செதுக்கல் போட்டியில் இத்தாலி நாட்டின் சார்பாகப் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்றாலும், தனது தாயக மண்ணை மறக்காது இவர் கிளிநொச்சியில் உள்ள உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் காய்கறிச் செதுக்கல் தொடர்பான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகின்றார்.
















