-இ.கலைஅமுதன்-
யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு பிற்பகல் ஒரு மணி முதல் இடம்பெறவுள்ளன.
இது குறித்து நிகழ்சி ஏற்பாட்டாளர்களான யாழ்.மாவட்ட இசைக் குழு கலைஞர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகசந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தொரிவிக்கையில்:
தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்விற்கு பலரும் தமது நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.
இசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, களியாட்ட நிகழ்ச்சி என பல விடயங்கள் இதன்போது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அனுமதி கட்டணமாக சிறுவர்களுக்கு நூறு ரூபாவும் பெரியவர்களுக்கு இருநூறு ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர்.
















