-கா.சுரேன்-
போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு ‘அகன்று செல்’ எனும் தொனிப்பொருளில் முழுநாடுமே ஒன்றாக என்ற தலைப்பில் யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும் நிகழ்வும் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் க.மனோகரன் மற்றும் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்திற்கான மாவட்ட இணைப்பாளர் வு.பிரேமராஜா ஆகியோர் வளவாளர்களாhக கலந்து கொண்டனர்.


















