அஸ்வெசும உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்த, நலன்புரி கொடுப்பனவை பெறுவோர் மற்றும் பெறாதோரின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகளைப் பெறுவோரின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயம் என்பதால் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு தகுதியுடைய 29 இலட்சத்து 93 ஆயிரத்து 558 பேர் ஏற்கனவே தமது தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.


















