மத்திய கிழக்கு போர் காரணமாக எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை தவிர்ப்பதற்காக, இந்தியா, சீனாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு நீண்டகால இடையூறுகள் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் எண்ணெய் விலைகள் திங்களன்று ஒரு பீப்பாய்க்கு சுமார் 120 டொலரை எட்டியது,
ஆனால் மீண்டும் 93 டொலராக ஆகக் குறைந்தது. ஈரான் சம்பந்தப்பட்ட போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. இருப்பினும், அவசரநிலை ஏற்பட்டால் எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது.
ஆனாலும், எரிபொருளை பெறுவதற்காக இந்தியா மற்றும் சீனாவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


















