-சொ.வர்ணன்-
சாணக்கியன் எம்பியால் நிகழ்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் எதிராளிகள் தரப்பின் சார்பில் சிரேஷ;ட சட்டத்தரணி கலாநிதி குருபரன் ஆஜராகவுள்ளார். ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் கீழான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் ஊடக நிறுவனம் உற்பட 23 பேர் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒரு பகுதியினர் சார்பில் சட்டத்தரணி குரபரன் முன்னிலையாகிறார்.


















