கொழும்புக்கும், துபாய்க்கும் இடையில் நேற்றும், இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு விமானங்களை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL 231 விமானமும், துபாயிலிருந்து கொழும்புக்கு திரும்பும் UL 232 விமானமும் மேற்படி இரண்டு நாட்களில் இயக்கப்படாது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வலைத்தளம் வழியாக தொடர்ந்து சரிபார்த்து, சரியான நேரத்தில் அறிவிப்புகளைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவி தேவைப்படுபவர்கள் இலங்கைக்குள் 1979 என்ற எண்ணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தையோ அல்லது சர்வதேச அளவில் 1094 11 777 1979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது பயண முகவரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமை மேம்படும்போது மத்திய கிழக்கு நடவடிக்கைகள் குறித்த மேலதிக புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.


















