-போதனா வைத்தியசாலையில் அனுமதி-
-சொ.வர்ணன்-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கெக்குவில் பகுதியிலுள்ள பாடசாலை விளையாட்டு நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது மைதானத்துக்குள் நுழைந்த ஒரு குழுவினர் அங்கு நின்றிருந்த மாணவனை பலர் மத்தியில் தாக்கியுள்ளனர். இதன்போது தலையில் காயம் அடைந்த நிலையில் மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மாணவன் அண்மையில் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


















