-கஜிந்தன்-
யாழ்.கட்டுவன் முனியப்பர் கோவிலை அண்மித்த பகுதியில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் வாளுடன் மூன்று சந்தேகநபர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரியின், கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 2 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ், மற்றைய சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 240 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மற்றொருவரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கைதான சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டுள்ள பொலிஸார், விசாரணை நிறைவில், சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















