கிளிநொச்சி – கல்மடுநகர் பகுதியில் தனியார் ஒருவரினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 1220 லீற்றர் பெற்ரோல், மற்றும் 530 லீற்றர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 1750 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் சுமார் 247 லீற்றர் டீசல் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி இரு சம்பவங்களிலும், 1997 லீற்றர் டீசல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சான்றுப் பொருட்களையும், சந்தேகநபரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















