-சந்தேகநபர்களுக்கு ஏப்.2 வரை மறியல்-
-பா.பிரதீபன்-
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீடத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நேற்று யாழ்.பதில் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சந்தேகநப ர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்த ரவிட்டுள்ளார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட சிரேஷ;ட விரிவுரையாளரின், இறுதிக் கிரியைகள் நேற்று அவருடைய இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் சித்த மருத்துவ பீடத்தில் அவரது உடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்,
அதனையடுத்து உடலம் யாழ்.கோப்பயன் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


















