ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக இலங்கை இராஜதந்திர பேச்சுக்களை ஆரம்பித்திருக்கும் நிலையில், ரஷ்ய எரிசக்தி துறையின் பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து அரசாங்கங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் எரிபொருள் கொள்முதல் செய்வது குறித்த ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ரஷ்யாவின் எரிசக்தி பிரதி அமைச்சர் இங்கைக்கு வருகை தரவிருப்பதாக தெரிவித்தார். மேலும், அந்தப் பயணத்தின்போது அவருடன் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.


















