-நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய-
இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த அனைத்து நெருக்கடியான சூழ்நிலைகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே கையாண்டார் என்று கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய, நாடு தற்போது சந்திக்கும் நெருக்கடியான சூழ்நிலையையும் விக்ரமசிங்கவே கையாள வேண்டும் என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி, பெல்லன்வில ராஜமகா விகாரையில் நடைபெற்ற ஒரு மத அனுசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு அறிவோ திறமையோ இல்லை. வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வுக்குப் பிறகு மற்ற அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன, ரயில் கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன. இந்தச் சூழ்நிலையைக் கையாள இந்த அரசாங்கத்திற்கு அறிவோ, திறமையோ இல்லை.
நாடு மேலும் நெருக்கடிக்குள் செல்கிறது. இந்த நெருக்கடியை நாம் ஒரு நாடாகவும் மக்களாகவும் எதிர்கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையை யாராவது கையாள வேண்டும். அதற்கு ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என அவர் மேலும் தெரிவித்தார்.


















