இலங்கையின் தேசிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பாதுகாப்பான அடையாளச் சான்றுகளை வழங்குதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன இது குறித்துத் தெரிவிக்கையில், இந்த ஆண்டில் 3வது அல்லது 4வது காலாண்டுக்குள், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு தழுவியரீதியில் அனைத்து தேசிய அடையாள அட்டைதாரர்களையும் மீளப் பதிவு செய்து, நவீன அடையாள அட்டை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் அடையாள அட்டையானது நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும். விரல் அடையாளங்கள் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும். எனவும் பிரதி அமைச்சர் எராங்க வீரரத்ன கூறினார்.


















