மேற்குக்கரை பகுதியில் உள்ள இரண்டு பாலஸ்தீன மசூதிகளுக்கு, இஸ்ரேலிய தீவிரவாதிகள் தீ வைத்த சம்பவம் தொடர்பில் 2 இஸ்ரேலியர்களை பொலிஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 24 ஆம் திகதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்குமிடையே ஏற்பட்ட மோதலில் 4 பாலஸ்தீனர்களும், 2 இஸ்ரேலிய வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இதற்குப் பழிவாங்கும் நோக்கில், ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்த இஸ்ரேலியர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
மசூதியின் உட்புறங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அங்கிருந்த பாலஸ்தீனர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேற்குக்கரை பகுதியில் கூடுதல் இராணுவம் குவிக்கப்பட்டு, பெரும் பதற்றம் நிலவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


















