நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முடிவு குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் அத்தகைய விதிமுறை எதுவும் இல்லை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.


















