இலங்கைக்கான துருக்கி குடியரசின் தூதுவர் செமிஹ் லுட்ஃபு துர்குட், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று (06) கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 27ஆவது கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு துருக்கி தூதுவர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சந்திப்பின் நினைவாக இரு தரப்பினராலும் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.


















