இந்தியாவின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் இந்தியா ஏ – யுஎஇ ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுஎஇ பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 14.2 ஓவர்களில் 254-3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அத்துடன் இந்தியா அரையிறுதிக்கும் முன்னேறியது.
இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த இந்தியாவின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 53 பந்துகளில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டிரைக் ரேட் 385ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் சூர்யவன்ஷி 28 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடித்தார். 26 பந்துகளில் சதத்தையும் 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் நிறைவு செய்து சாதனை படைத்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டைச் சதம் அடித்தவர்கள்
52 பந்துகளில் – சூர்யவன்ஷி (2026) {இந்திய வீரர்]
103 பந்துகளில் – சாட் போவ்ஸ் கேன்டர்பரி (2024) [நியூசி. வீரர்]
114 பந்துகளில் – நாராயண் ஜெகதீசன் (2022) {இந்திய வீரர்]
114 பந்துகளில் ஹாரி புரூக் (2026) [இங்கிலாந்து வீரர்]


















