ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு உயிர்ழந்துள்ளார்.
குறித்து இளைஞன் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சேவிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார்.
நேற்று வழக்கம்போல் தனது வேலைத்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலெயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



















