தேசிய மக்கள் சக்தியின் யாழ். அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது கட்சி ஆதரவாளர்களால் நூலகத்திற்கு அன்பளிப்பாக நூல்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை யாழ். ஊடக அமையத்தினரால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கையளிக்கப்பட்டது.


















