யாழில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது.
நல்லூர் ஆலயத்தின் அருகில் அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்றதைத் தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மாலைஅணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி உணவையும், நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
12 நாட்களுக்கு உணவையும் நீரையும் மறுத்து, 1987 செப்ரெம்பர் 26 ஆம் திகதி அன்று அவர் தனது உயிரை தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















