தேசியப் பாடசாலைகளில் 3 வருட சேவையை நிறைவு செய்த கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அதே பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவடைந்தது.
ஆசிரியர்களால் கல்வி அமைச்சில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட குறித்த உண்ணாவிரதப் போராட்டம், ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் கைவிடப்பட்டது.
இந்தப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சங்கம் கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும், இந்தக் குழு நேற்று கல்வி அமைச்சிற்கு சென்று தங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று கூறியது. பின்னர் அவர்களில் பலருக்கு கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது.
இதன்பின்னர் குறித்த போராட்டம் நிறைவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

















