உலகப் பாரம்பரியத் தளமான சிகிரியா பளிங்குச் சுவரை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யுவதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாவட்ட நீதவான் நிலந்த விமலரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட யுவதி நேற்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















