உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்துள்ளது.
செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, இலங்கை 97 ஆவது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு குறியீட்டில், இலங்கை 96 ஆவது இடத்தில் இருந்தது.
இலங்கையுடன் சேர்ந்து, ஈரானும் இந்த குறியீட்டில் 97 ஆவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு, முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கடவுச்சீட்டுகளை மதிப்பிடுகிறது.
இந்தக் குறியீட்டின்படி சிங்கப்பூர் உலகின் முன்னிலையான கடவுச்சீட்டாக உருவெடுத்துள்ளது.
அதே நேரம் தென்கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இந்தக் கடவுச்சீட்டு குறியீட்டில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















