முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனை அமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மின்சார சபை 2025 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் 6.8 சதவீத அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், பரிந்துரைகளையும் எழுத்துபூர்வமாக ஆணையகத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாய்மொழிக் கருத்துக்களைப் பெற பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான பொது ஆலோசனை அமர்வுகள் இன்று ஆரம்பமாகும்.
2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துபூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் : info@pucsl.gov.lk
வாட்ஸ்அப் : 076 427 1030
ஃபேஸ்புக் : www.facebook.com/pucsl
தபால் மூலம்:
மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை – 2025
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு
6வது மாடி, சிலோன் வங்கி வர்த்தக கோபுரம்
கொழும்பு 03.

















