ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில் வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30 ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.
இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்த பின்னர், இந்திய ரயில்வேயில் 1,500 பெண்கள் ஓட்டுநர் பணியில் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



















