மொனராகலை – எத்திமலே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுப்பட்ட பெண் ஒருவர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எத்திமலே பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெமுனுபுரவைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச்சென்ற சந்தேக நபருக்குச் சொந்தமானது என நம்பப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


















