செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் உதவித் தொகை தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த மாதத்திற்கான அஸ்வெசும பயனாளி குடும்பங்களின் இம்மாதத்திற்கான முதியோர் உதவித் தொகை இன்று வெள்ளிக்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான உதவித்தொகையை மொத்தம் 602,852 பயனாளிகளுக்கு பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 3,014,260,000 ரூபா ஒதுக்கபட்டுள்ள நிலையில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, பயனாளிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் தங்கள் முதியோர் கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.


















