2025 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான செயல்முறை பரீட்சைகளுக்கான கண்காணிப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk அல்லது https://eservices.exams.gov.lk/practical ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


















