முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் இன்று புதன்கிழமை அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பத்துடன் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் காயமடைந்துள்ளதோடு, ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்துத் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















