ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து இன்று காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல அதிகாரிகள் அமெரிக்காவுக்கு கடந்த வாரம் சென்றிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டதையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அதிகாரிகள் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















