கதிர்காமம் வெஹெரகல ஏரியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 74 T – 56 மகசின்கள், 36 T – 56 இலகு ரக இயந்திர துப்பாக்கி மகசின்கள், பல T – 81 மேகசின்கள் மற்றும் பிற வெடிபொருட்கள் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















