வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவமானது கடந்த மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்றது.
விபத்துக்குள்ளான மீராவோடை – 5 மாதர் சங்க வீதியைச் சேர்ந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
















