வவுனியா மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
இம்முறை மாவட்டத்தில் 25,425.37 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு வவுனியா மாவட்டத்தில் உள்ள 12 கமநல சேவை மையங்களும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் நெல் விதைப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


















