யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளராக கடமையேற்கவுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றிய வைத்தியர் ஜமுனானந்தா நேற்று இடமாற்றம் பெற்றதையடுத்து, இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.
இதனையொட்டி நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அவரது பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவமனையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















