புத்தளம் – எருக்கலம்பிட்டி (நாகவில்லு) முஸ்லிம் மகா வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி பாடசாலைக்கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஹுசைமத் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் அ.இ.ம.காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சுமார் 8 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இம் மூன்று மாடி கட்டிடத்தில், சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்கள் அமருமளவான மண்டபம் உள்ளிட்ட வகுப்பறைகளைக்கொண்டு இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















