இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, மொரகெட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் குளவி கொட்டுக்கு இலக்காகி 20 பாடசாலை மாணவர்களும், 56 பெற்றோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்த மரத்தில் உள்ள குளவிக் கூடு கலைந்ததால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின் வீடு திரும்பியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


















