-சி.ஜெகதீஸ்வரன்-
2008 ஆம் ஆண்டு காணாமல் போன தனது மகனை தேடிய தாய் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்து அழுகிய நிலையில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அளவெட்டி தெற்கு மலைவேம்படியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளைகளின் தாயாரான பாலச்சந்திரன் உமாதவி (வயது- 74) என்ற வயோதிபமாது ஆவார்.
மேற்படி வயோதிபமாதுவின் கணவர் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளைகளும் இருந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் கல்முனை பகுதியில் மகன் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் அளவெட்டிப் பகுதியில் அவர் தனிமையில் வசித்து வந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்களால் கிராம அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டனர்.
இதன்போது குறித்த வீட்டில் அந்த வயோதிபதாய் உயிரிழந்த நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இதன் பினர் அங்கு சென்ற யாழ்.மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை தெல்லிப்பளைப் பொலிசார் நெறிப்படுத்தினர்.

















