-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
கோப்பாய் பிரதேச செயலகம் நடாத்தும் சிறுவர் ,முதியோர் மற்றும் மற்றுவலுவுடையோர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன் பிரதம விருந்தினராகவும் சமூக செயற்பாட்டு மைய பிரதம நிறைவேற்று அலுவலர் நடராசா சுகிர்தராஜ் மற்றும் லயன்.எஸ்.அலிஸ்ரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


















