வட மாகாண தந்தை செல்வா நற்பணி மன்றம் வேதம் மூளாய் பகுதியில் கண்பரிசோதனை செய்தவர்களுக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும், விருது வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் இந்நிகழ்வில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதோடு, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ச.ஜெந்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் க.லங்கேஸ்வரன், சிறப்பு விருந்தினராக மூளாய் சைவப் பிரகாச வித்தியாசாலையின் அதிபர் பா. பாலசுப்பிரமணியம், கௌரவ விருந்தினராக சட்டத்தரணி எஸ்.சிவபாலசுப்பிரமணியம், மூளாய் கிராமசேவகர் சிவரூபன் ,வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் நாகரஞ்சனி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், இப்பிரதேசத்தில் சமூக செயற்பாட்டாளர்களாக விளங்கும் ச.சின்னையா, மா. கணநாதன் மற்றும் ஆ.ஜெயராஜ் ஆகியோர் ‘பொற்பணி செம்மல்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்நிகழ்வுக்கான ஒழுங்குகளை நிரோஷன் (அறநெறிப் பொறுப்பாசிரியர்), தந்தை செல்வா நற்பணி மன்ற பொதுச் செயலாளர் எஸ்.கே.தளையரட்ணம், மன்றத் தலைவர் உமாவதி, பரமானந்தவல்லி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.


















