பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்று இந்தியா பயணமாகும் பிரதமர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார் எனவும் இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார்.
மேலும் உயர்மட்ட சந்திப்புகளிலும் அவர் பங்கேற்கவுள்ளார். 17 ஆம் திகதி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், ‘நிச்சயமற்ற காலங்களில் வழிகாட்டுதல் மாற்றம்’ என்ற தலைப்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















