-சு.பாஸ்கரன்-
பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் சுமார் 40 கிலோ 400 கிராம் கேரள கஞ்சாவை கூலர் வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூலர் வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு சுமார் 22 கஞ்சா பொதிகள் கடத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைதான இரு சந்தேகநபர்களையும், வாகனம் மற்றும் சான்றுப் பொருளையும் அதிரடிப்படையில் மேலதிக விசாரணைக்காக பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


















