தொழிலாளர் சட்டத் திருத்தங்களின் கீழ், நான்கு பிரதான சட்டமூலங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், தற்போது நடைமுறையில் உள்ள 14 தொழிலாளர் சட்டங்களை ஆய்வு செய்வதற்காக 17 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சின் செயலாளர் இந்தக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்.
இந்தக் குழு முதற்கட்டமாக கூடி, தொழிலாளர் தொடர்பான நான்கு பிரதான சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கான முதன்மை இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் செயலாளர் கூறினார்.


















