திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளை வலுப்படுத்தவும், பகல் நேர பராமரிப்பு நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளை உள்ளீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த பிரதேச மட்ட சுய உதவிக் கலந்துரையாடலில், கிண்ணியாபு, பிரதேச செயலகப் பிரிவில் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக அமைக்கப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் பராமரிப்பு நிலையத்தில், ஆறு மாதம் தொடக்கம் 18 வயது வரையான மாற்றுத் திறனாளிகளை உள்வாங்குவது தொடர்பிலும், எதிர்காலத்தில் சமூகத்துடன் இணைந்த விசேடமானவர்களை வலுப்படுத்தவும் நல்லதொரு திட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.


















