வரக்காபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவ்வ – அம்பேபுஸ்ஸ வீதியில் வாரியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவத்துக்குச் சொந்தமான கெப் வாகனமும், மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கெப் வாகனத்தின் சாரதியும், மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதியும் காயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 17 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















