-செ.சுமந்தன்-
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த முள்ளியவளை 1ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தசாமி விசுவலிங்கம் என்பவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சம்மந்தப்பட்ட வாகன சாரதி முள்ளியவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


















